தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை


ADDED : பிப் 04, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்:செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது.

சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், 52ம் ஆண்டு, திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 8:30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும், ரத்தினாஜல அம்மையாருக்கும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு திருவீதி உலா, 11:00 மணிக்கு, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

சொற்பொழிவை, தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மதியம், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us