'இது எல்லாம் ரொம்ப தப்புங்க' சுற்றுலா பயணியர் அதிருப்தி
'இது எல்லாம் ரொம்ப தப்புங்க' சுற்றுலா பயணியர் அதிருப்தி
ADDED : பிப் 23, 2026 04:28 AM

ஊட்டி: ஊட்டி பூங்கா சாலை நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. இப்பூங்காவின் வெளிப்பகுதியில் கார்டன் சாலை நடைபாதை, சாலை ஓரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாலையோர கடை வைத்துள்ளனர்.
இவர்கள் ஊட்டியில் விளைய கூடிய கேரட் போன்ற காய்கறிகள், வேர்கடலை, பூக்கள், விதைகள், சோளம் போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
பொம்மை, தொப்பி, குல்லா போன்றவற்றையும் விற்பனை செய்து அதில் கிடைக்க கூடிய வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். சமீப காலமாக நடைப்பாதை முழுவதையும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணியர் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
என, புகார் எழுந்துள்ளது. ஏப்., மாதங்களில் சீசன் துவங்குவதால் இப்போதே நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலா பயணியர் நடைப்பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
