தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

 வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

 வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது


ADDED : பிப் 13, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நிருபர் குழு-:

நீலகிரி மாவட்டம் முழுவதும் நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

'மகாத்மா காந்தி கிராமப்புற, 100 நாள் வேலை திட்ட மாற்றத்தை கைவிட வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதுடன், உணவு, மருந்து, விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை நீக்க வேண்டும்; மின்சாரம், வேளான்,சாலை பாதுகாப்பு மசோதா சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்; பொதுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடந்தது.

பல இடங்களில் நடந்த போராட்டத்துக்கு, எல்.பி.எப்.,- சி.ஐ.டி.யூ.சி., -ஏ.ஐ.டி.யூ.சி.,-ஐ.என்.டி.யூசி.,- எச்.எம்.எஸ்., -எஸ்.கே.எம்., மற்றும் நீலமலை அனைத்து தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் முன்னிலை வகித்தன.

அதில், ஊட்டியில் நடந்த மறியல் போராட்டத்துக்கு எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட, 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

* கோத்தகிரியில் சி.ஐ.டி.யூ., மண்டல துணை செயலாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட, 30 பெண்கள் உட்பட, 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

* பந்தலுார் சேரம்பாடி கனரா வங்கி முன்பாக நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மாவட்ட துணை செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். அதில், மூன்று பெண்கள் உட்பட, 41 பேர் கைது செய்யப்பட்டனர். பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

--* குன்னுார் லெவல் கிராசிங் பகுதியில், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் வினோத் தலைமை வகித்தார். 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us