/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படுகர் கிராமங்களில் 'தொட்டஹப்பா' ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
/
படுகர் கிராமங்களில் 'தொட்டஹப்பா' ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
படுகர் கிராமங்களில் 'தொட்டஹப்பா' ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
படுகர் கிராமங்களில் 'தொட்டஹப்பா' ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 31, 2025 11:18 PM

ஊட்டி; குந்தாபகுதியில் உள்ள படுகரின கிராமங்களில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும், 'தொட்டஹப்பா' பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குந்தா பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் தை மாதத்தில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும் 'தொட்ட ஹப்பா ' பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த பண்டிகையின் போது படுகரின மக்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர். பண்டிகையின் போது பாரம்பரிய நடனமாடுதல் கில்லி மற்றும் கும்மி போன்ற விளையாட்டுகளுடன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும், பண்டிகையை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி அவற்றிற்கு காணிக்கையாக கோதுமை தோசை (பொத்திட்டு) உணவாக வழங்குகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டின் பண்டிகையை ஒட்டி, மஞ்சூர் அருகே துானேரி கரியமலை கிராமத்தில் தொட்டஹப்பா பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிராம மக்கள் பாரம்பரிய வெள்ளை உடைகளை அணிந்து அங்குள்ள கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் சிறுவர், சிறுமிகள் இடையே விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின், மேள தாளங்களுடன் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதே போல் , மஞ்சூரில் உள்ள பிற படுகரின கிராமங்களில் தொட்ட ஹப்பா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.