/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை தருவதாக மோசடி ஊட்டியில் மூவர் கைது
/
வேலை தருவதாக மோசடி ஊட்டியில் மூவர் கைது
ADDED : ஆக 31, 2025 07:00 AM

ஊட்டி: அரசு வேலை வாங்கி தருவதாக, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி வண்டிசோலையைச் சேர்ந்த கீதாலட்சுமியின் மகளுக்கு, குன்னுாரைச் சேர்ந்த கிருஷ்ணன், 34, என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கினார். இவருக்கு ஊட்டி காந்தளைச் சேர்ந்த ராஜன், 47, பிங்கர்போஸ்டைச் சேர்ந்த வினோத், 45, ஆகியோர் உதவியாக இருந்தனர்.
இவர்கள் மூவரும் சேர்ந்து, ஊட்டி தலைக்குந்தாவைச் சேர்ந்த கார்த்திகா, சரோஜினி, ஜெயலட்சுமி, ராம்கி ஆகியோரிடம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கினர். பின், வேலை வாங்கி தராமல் ஏமாற்றினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., சக்திவேல் உத்தரவில், போலீசார் விசாரித்தனர்.
டி.எஸ்.பி., சக்திவேல் கூறுகையில், ''அரசு வேலை வாங்கி தருவதாக கிருஷ்ணன், ராஜன், வினோத் ஆகியோர், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. மூவரும், கைது செய்யப்பட்டனர்,'' என்றார்.