/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாடுகளை கொன்ற புலியை பிடிக்க மூன்று கூண்டுகள்: 30 தானியங்கி கேமராக்கள்; 35 பேர் கொண்ட வனக்குழு அமைப்பு

ADDED : ஆக 08, 2025 08:30 PM

கூடலுார்; கூடலுார் அருகே மாடுகளை தாக்கி கொன்ற புலியை, 3 கூண்டுகள் வைத்து பிடிக்கும் பணியில் வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார், தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களில், 10 மாடுகளை புலி தாக்கி கொன்றது. 'புலி, மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர். இதனிடையே, புலியை பிடிப்பது, யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் பொதுமக்கள், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.
இந்நிலையில், மாடுகளை தாக்கி கொன்ற புலியை பிடிக்க, முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார். தொடர்ந்து, மூன்று இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. புலியை கண்காணிக்க, 30 தானியங்கள் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்கும் பணியில், கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமையில், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட, 35 பேர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை வனவிலங்கு ஆர்வலர்கள் மோகன்ராஜ், கால்நடை டாக்டர் சுகுமாரன், நைஜில் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், புலியை பிடிப்பது தொடர்பான பணிகள் குறித்து திட்டம் வகுக்கப்பட்டது.
வன அலுவலர் கூறுகையில்,'கடந்த பிப்., மாதம் முதல் இந்த புலி பல மாடுகளை தாக்கி கொன்றுள்ளது. இதனை பிடிக்க உத்தரவு கிடைத்துள்ளது. கேரளா வயநாட்டில் இருந்து, ஒரு கூண்டு வரவழைக்கப்பட்டு, மொத்தம் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,'என்றார்.
தொடர்ந்து, மக்களுடன் வனத்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், மூன்று நாட்களாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.