ADDED : ஆக 19, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடியில் இருந்து, கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில், கையுன்னி என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை மூன்று கார்கள் வேகமாக வந்துள்ளன.
அப்போது. மூன்று கார்களும் ஒன்றோடு, ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில், ஒரு காரில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து சமரசமாக பேசிகொண்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர். மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.
