ADDED : செப் 17, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
பந்தலுார் அருகே இரும்புபாலம் பகுதியில் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடந்த, 13-ம் தேதி நெல்லியாளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற போது, கிராம மக்கள் தட்டி கேட்டுள்ளனர்.
அப்போது தகராறில் ஈடுபட்ட கும்பல், கிராம மக்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன், பட்டா கத்தியை சாலையில் உரசி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
அது குறித்த புகாரில், தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து, லோகேஸ்வரன்,28, நவீன்,25, ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், தலை மறைவான மூவரை தேடி வந்த நிலையில், நேற்று ராகுல்,21, ராஜேஷ்கண்ணா,22, தீபக்,21, ஆகியோரை கைது செய்தனர்.
