/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ் -- லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்
/
அரசு பஸ் -- லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்
அரசு பஸ் -- லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்
அரசு பஸ் -- லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்
ADDED : ஆக 14, 2025 08:13 PM

கூடலுார்; கூடலுாரில் இருந்து மசின குடி செல்லும் அரசு பஸ், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, கூடலுாரில் இருந்து மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, முதுமலை தெப்பக்காடு நோக்கி சென்றது.
பிதுருலா பாலம் அ ருகே, எதிரே வந்த லாரியும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகின. அதில், பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த ராமகிருஷ்ணன், மான்பி உட்பட மூவருக்கு சிறு காய ங்கள் ஏற்பட்டது. அவர்கள், கூடலுார் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து காரணமாக, நீலகிரி, கேரளா, கர்நாடக இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மசினகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.