/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி அரவேனு அருகே மூன்று சிறுத்தைகள் உலா
/
கோத்தகிரி அரவேனு அருகே மூன்று சிறுத்தைகள் உலா
ADDED : ஜூலை 18, 2025 09:07 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே கருஞ்சிறுத்தையுடன், இரு சிறுத்தைகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம், கோட்ட ஹால், அரவேனு இடையே, குறுக்குப்பாதையில் அமைந்துள்ள பெரியார் நகரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.
வனத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள், அவ்வப்போது, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அதிகாலை, 3:00 மணி அளவில், ஒரு கருஞ்சிறுத்தையுடன் இரண்டு சிறுத்தைகள், சாலையில் உலா வந்தன. சிறிது நேரம் அங்கும், இங்கும் சென்ற சிறுத்தைகள் தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. சிறுத்தைகளின் நடமாட்டம், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இந்த தகவலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கடந்த பல மாதங்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.