ADDED : செப் 30, 2024 06:38 AM

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பந்தலுார் அருகே, ராஜூ,74, என்பவர் நேற்று முன்தினம் மாலை இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது நீர்மட்டம் பகுதியில் எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில், ராஜு பலத்த காயம் அடைந்தவுடன் அவரின் வலது கால் துண்டிக்கப்பட்டது.
அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து ஏற்படுத்திய, கூடலுார் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆமேஷ் என்பவர் தேவாலா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விபத்து குறித்து தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
* கேரளா மாநிலம் வைத்திரி என்ற இடத்திலிருந்து, பந்தலுார் பகுதிக்கு வந்த ஆம்னிவேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, படைச்சேரி பகுதியில் சாலையோர தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
அதில், வைத்திரி பகுதியை சேர்ந்த நஸ்ருதீன் மற்றும் முஸ்தபா ஆகியோர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.