/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
/
மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2025 08:33 PM

கூடலுார்; தமிழக-கேரளா எல்லையான நாடுகாணியில், கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் லாரி பழுதாகி நின்றதால், மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கட்டுமான பொருட்கள் ஏற்றி கேரளா செல்லும் லாரி, நேற்று மாலை, கூடலுாரை கடந்து கேரளா நோக்கி சென்றது. மாலை,4:30 மணிக்கு, தமிழக-கேரளா எல்லையான நாடுகாணியில்பழுதாகி கூடலுார் சாலையில் நின்றது.
இதனால், மூன்று மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார், பந்தலுார் மற்றும் நிலம்பூர் சாலையில், அரசு பஸ், லாரி மற்றும் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. நாடுகாணி சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார், தேவாலா போலீசார் அப்பகுதிக்கு சென்று, லாரியை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதனால், மூன்று மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

