/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
/
மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அதில், தொரப்பள்ளி அருகே முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 5:00 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே, இயக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கார்குடி வனச்சரக வன ஊழியர்கள், கூடலுார் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.