/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீராதார இடத்தில் 'டைடல் பார்க்': எதிர்த்து வெளிநடப்பு
/
நீராதார இடத்தில் 'டைடல் பார்க்': எதிர்த்து வெளிநடப்பு
நீராதார இடத்தில் 'டைடல் பார்க்': எதிர்த்து வெளிநடப்பு
நீராதார இடத்தில் 'டைடல் பார்க்': எதிர்த்து வெளிநடப்பு
ADDED : ஆக 29, 2025 09:16 PM

குன்னுார்; குன்னுாரில் எடப்பள்ளி பந்துமை பகுதியில், இயற்கை வளங்களை அழித்து, 'டைடல் பார்க்' கொண்டு வருவதை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குன்னுார் எடப்பள்ளி அருகே பந்துமை பகுதி, 'நீர்ப்பிடிப்பு மற்றும் சதுப்பு நிலபகுதி' என, வகைப்படுத்தப்பட்டு, நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சுற்றுப்புற பகுதிகளில், 'குறிஞ்சி செடிகள், தவிட்டு பழ செடிகள், மூலிகை செடிகள், மரங்கள்,' என, இயற்கை வளங்கள் அதிகம் உள்ளதால், ஏற்கனவே கோர்ட் கட்டும் திட்டம் வந்த போது, ஆய்வு செய்த நீதிபதிகள், 'இயற்கையை அழிக்க கூடாது,' என கூறி, திட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இந்நிலையில், தி.மு.க., அரசு இங்கு, 'டைடல் பார்க், அரசு கலை கல்லுாரி, கூடுதல் கலெக்டர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய வீரர்களின் குடியிருப்பு,' என, 10 ஏக்கர் பரப்பில் கட்டுமானங்களை கட்ட முடிவு செய்து, டெண்டர் விட முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில், மன்ற அனுமதிக்கு இந்த தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணகுமார் பேசுகையில், ''நீராதாரம், சதுப்பு நிலம் என வகைப்படுத்தப்பட்ட இந்த இடத்தில் திட்டங்களை செயல்படுத்தினால், வருங்காலத்தில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கும். தரம் இல்லாத பணிகளை மேற்கொள்ளும் திராவிட மாடல் அரசால் இயற்கை வளங்களுக்கு சேதங்கள் ஏற்படும். எனவே, இதனை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும்,''என்றார்.
அப்போத, ராமசாமி, ஜாகிர் உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் திட்டத்தை அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என கூறியதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி, ராஜ்குமார், ரங்கராஜ், உமாராணி, லாவண்யா ஆகியோர் சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

