/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாட்டை தாக்கி கொன்ற புலி: அச்சத்தில் மக்கள்
/
மாட்டை தாக்கி கொன்ற புலி: அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூலை 22, 2025 09:25 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை, சர்க்கார்மூலா கணியம்வயல் பகுதியில் அசைனார் என்பவரின் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த, இரண்டு எருமை கன்று குட்டிகளை, கடந்த வாரம் வன விலங்கு தாக்கி கொன்றது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் பசுமாடு கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது. அங்கு புலியின் கால் தடத்தை பார்த்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் வன ஊழிர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். புலி அல்லது சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாடு, இறந்த இடத்தில், தானியங்கி கேமராக்கள் வைத்து, கண்காணிக்கப்படும்.
அதில் பதிவாகும் படங்கள் மூலம் மாட்டை தாக்கி கொன்றது புலியா, சிறுத்தையா என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,'என்றனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் புலியின் கால் தடம் கிடைத்திருப்பதன் மூலம், ஏற்கனவே கன்று குட்டிகளையும் இதே புலி தாக்கி கொன்றுள்ளது உறுதியாகிறது.
மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.