/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு: கேமரா பொருத்தும் பணி துவக்கம்
/
புலிகள் கணக்கெடுப்பு: கேமரா பொருத்தும் பணி துவக்கம்
புலிகள் கணக்கெடுப்பு: கேமரா பொருத்தும் பணி துவக்கம்
புலிகள் கணக்கெடுப்பு: கேமரா பொருத்தும் பணி துவக்கம்
ADDED : நவ 01, 2024 11:40 PM

பந்தலுார்; கூடலுார் வன கோட்டத்துக்கு உட்பட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக, கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் நடப்பாண்டுக்கான புலிகள் கண்க்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத்துறையினருக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கூடலுார் வன கோட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகங்கள் உட்பட்ட, புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்,150 இடங்களில், தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவக்கப்பட்டது.
புலிகள் வந்து செல்லும் வழித்தடங்களில், குறிப்பிட்ட பகுதியில், 'இடது; வலது' என, இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு 'வாரத்திற்கு ஒரு நாள்' என, ஒரு மாதத்துக்கு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட, ஓர்கடவு வனப்பகுதியில் வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் ஜெயமோகன், வேட்டை தடுப்பு காவலர்கள் குமார்ராஜன், ஜெகன் உள்ளிட்டோர் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், ' இப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டதால், பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தானியங்கி கேமரா அருகில் சென்றால் செல்பவர்களின் புகைப்படம் கேமராவில் பதிவாகும் என்பதால், கேமரா அருகில் யாரும் சொல்லக்கூடாது,' என்றனர்.