/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி
/
கூடலுார் வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி
ADDED : மே 01, 2025 04:35 AM

கூடலுார், : கூடலுார் வனக்கோட்டத்தில், நேற்று துவங்கிய புலிகள் கணக்கெடுப்பு பணியில், 100 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களை தொடர்ந்து, அதனை ஒட்டிய வன கோட்டங்களிலும், கடந்த ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
அதன்படி, கூடலுார் வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. இப்பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பணி, 4ம் தேதி வரை நடக்கிறது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள், புலிகளை நேரடியாக பார்ப்பது. அதன் எச்சம், கால் தடம் போன்ற முறையில் கணக்கெடுப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியில் கிடைக்கும் விபரங்களை, தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'புலி கணக்கெடுப்பு பணிக்காக வனப்பகுதி, 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பகுதிக்கு மூன்று முதல் நான்கு வன ஊழியர்கள் வீதம் மொத்தம், 100 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் விபரங்களின் அடிப்படையில் புலிகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.