/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை
/
மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை
மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை
மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை
ADDED : ஜன 23, 2025 11:01 PM
பந்தலுார், -முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி மர்மமான முறையில், உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியான விலங்கூர் அருகே பொம்மதேவர் கோவிலை ஒட்டிய பகுதிகளில், உடல் சிதறிய நிலையில் புலி ஒன்று உயிரிழந்த கிடந்தது தெரிய வந்தது. அதையடுத்து வனத்துறையினர் ஆய்வு செய்ததுடன், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆய்வு செய்தார்.
அதில், 7 மாதம் வயதுடைய புலி உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. அதை சுற்றி ஆய்வு செய்ததில் எந்த தடயங்களும் கிடைக்காத நிலையில், புலியின் உடல் பாகங்கள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது. புலி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.