/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எஸ்டேட் பகுதியில் புகுந்து 10 மாடுகளை கொன்ற புலி; அச்சத்தில் மக்கள்! அசம்பாவிதம் நடப்பதற்குள் கூண்டு வைக்குமா வனத்துறை?
/
எஸ்டேட் பகுதியில் புகுந்து 10 மாடுகளை கொன்ற புலி; அச்சத்தில் மக்கள்! அசம்பாவிதம் நடப்பதற்குள் கூண்டு வைக்குமா வனத்துறை?
எஸ்டேட் பகுதியில் புகுந்து 10 மாடுகளை கொன்ற புலி; அச்சத்தில் மக்கள்! அசம்பாவிதம் நடப்பதற்குள் கூண்டு வைக்குமா வனத்துறை?
எஸ்டேட் பகுதியில் புகுந்து 10 மாடுகளை கொன்ற புலி; அச்சத்தில் மக்கள்! அசம்பாவிதம் நடப்பதற்குள் கூண்டு வைக்குமா வனத்துறை?
ADDED : ஜூலை 27, 2025 09:36 PM

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, 10 மாடுகளை தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள, சர்கார்மூலா ஒட்டியுள்ள தனியார் எஸ்டேட் பகுதியில், கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலி இதுவரை, 10 வளர்ப்பு மாடுகளை தாக்கி கொன்றது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி தாக்கி எருமை பலி இந்நிலையில், நேற்று முன்தினம், தேயிலை தோட்ட பகுதியில் ஆலி என்பவர் ஐந்து எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டு கண்காணித்தார். திடீரென, அப்பகுதிக்கு வந்த புலி, எருமைகளை விரட்டி சென்றது. புலியை பார்த்த ஆலி அலறி அடித்து ஓடியுள்ளார். சிறிது நேரத்தில் ஐந்தில், ஒரு எருமையை காணவில்லை.
வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்த போது, எருமை புலி தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அப் பகுதியில் தானியங்கி கேமராக்கள் வைத்து, வன உழியர்கள் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களில், 10 மாடுகளை புலி தாக்கிக் கொன்ற சம்பவத்தால், கிராம மக்கள் அவசர தேவைக்கு கூட நடமாட முடியாத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் ஆய்வு அப்பகுதியை, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் மாரிமுத்து, வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை சந்தித்த மக்கள், 'மாடுகளை தாக்கி வரும் புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும். தனியார் எஸ்டேட் பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
அரசு அதிகாரிகள் கூறுகையில்,'புதர்களை அகற்றுவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலியை பிடிக்க ஓரிரு நாட்களில் கூண்டு வைக்க ஆலோசனை நடத்தப்படும். எனவே, மக் கள் தனியாக இப்பகுதிகளில் உலா வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இந்த தகவல்கள் குறித்து, ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.

