/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் சாலையில் உலா வந்த புலி: வனத்துறை எச்சரிக்கை
/
இரவில் சாலையில் உலா வந்த புலி: வனத்துறை எச்சரிக்கை
இரவில் சாலையில் உலா வந்த புலி: வனத்துறை எச்சரிக்கை
இரவில் சாலையில் உலா வந்த புலி: வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 14, 2025 08:44 PM

கூடலுார்; முதுமலை, மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, மாயார், சிங்காரா உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அவசர தேவைக்கான உள்ளூர் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் மாலை, 6:00 மணி முதல் அடுத்த நாள் காலை வரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனியார் விடுதிகளில் தங்கும் சில சுற்றுலா பயணிகள், ஒரு சில உள்ளூர் வாகன ஓட்டுனர்கள் உதவியுடன், இரவு நேரங்களில் வனவிலங்குகளை ரசிப்பதற்காக பொக்காபுரம், வாழை தோட்டம் சாலைகளில் வாகன சவாரி சென்று வருவதாக புகார் உள்ளது.
இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர், 'இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரித்துள்ளனர். இந்நிலையில், பொக்காபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு உலா வந்த புலியை, அவ்வழியாக வாகனத்தில் பயணித்தவர்கள், பின் தொடர்ந்து, அதனை 'வீடியோவாக' பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடியை ஒட்டிய சாலைகளில், இரவில் சுற்றுலா உள்ளிட்ட வெளி வாகனங்கள் இயக்க தடை விதித்து, கண்காணித்து வருகிறோம். வெளி வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக சென்ற உள்ளூர் நபர்கள் புலியின் 'வீடியோவை' பதிவு செய்து இருக்கலாம்.
இதனால், இரவில் சாலையோரங்களில் உலா வரும் மற்றும் சாலையை கடக்கும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட கூடாது, என, உள்ளூர் மக்கள், வாகன ஓட்டுனர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'என்றனர்.