/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் புலி; அச்சத்தில் நடமாடும் மக்கள்

ADDED : மே 04, 2025 09:35 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் புலி நடமாடி வருவது மக்களை அச்சமடைய செய்து உள்ளது.
கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இரு நாட்களுக்கு முன்பு, புலி கணக்கெடுப்பு பணியில் பந்தலுார் அருகே, பிதர்காடு வனச்சரகம் சார்பில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதர் பகுதியில் புலி ஒன்று அமர்ந்திருந்தை வனப்பகுதியில் 'போட்டோ' எடுத்தனர்.
அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கூறுகையில், 'கடந்த, 2015ல் இங்குள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருந்த புலி, மகாலட்சுமி என்ற பெண் தொழிலாளியை கடித்து கொன்றது. தமிழக- கேரள எல்லையில் இதே போல ஒருவரை புலி கொன்றது. இத்தகைய சம்பவங்களால், அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் நடமாடும் புலியை வனத்துறையினர் கண்காணித்து, மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.