/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு மாடுகளை கொன்ற புலி; மசினகுடி அருகே மக்கள் பீதி
/
இரு மாடுகளை கொன்ற புலி; மசினகுடி அருகே மக்கள் பீதி
இரு மாடுகளை கொன்ற புலி; மசினகுடி அருகே மக்கள் பீதி
இரு மாடுகளை கொன்ற புலி; மசினகுடி அருகே மக்கள் பீதி
ADDED : ஜூன் 03, 2025 06:57 AM

கூடலுார் : மசினகுடி அருகே இரண்டு மாடுகளை தாக்கி கொன்ற புலியின் நடமாட்டத்தை, 24 தானியங்கி கேமராக்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி, சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கிக் கொன்றது. நேற்று முன்தினம் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை சிறுவன் பார்த்துள்ளான்.
தகவலில், அங்கு வந்த வனத்துறையினர், புலியை கண்காணிக்க, 24 தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். வனச்சரகர் தனபால் தலைமையில், 20 பேர் கொண்ட குழுவினர், சுழற்சி முறையில் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் தனியார் இடத்தில் உள்ள முட்புதர்களை வனத்துறையினர், பொக்லைன் உதவியுடன் நேற்று அகற்றினர்.
அப்பகுதியில் உள்ள மேல்கம்மநெல்லி கிராமப்பகுதி மாணவர்களை, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வந்து, மீண்டும் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஒலிபெருக்கியில், 'பகல் நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் தனியாக செல்வதையும், இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்' என, வனத்துறையினர் அறிவிப்பு செய்து வருகின்றனர். இதனால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.