/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம்; முட்புதரை அகற்றும் பணி துவக்கம்
/
எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம்; முட்புதரை அகற்றும் பணி துவக்கம்
எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம்; முட்புதரை அகற்றும் பணி துவக்கம்
எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம்; முட்புதரை அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 28, 2025 08:42 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை அருகே, புலி மாடுகளை தாக்கி கொன்ற எஸ்டேட் பகுதியில் முட்புதரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார், தேவர்சோலை அருகே, சர்க்கார்மூலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், உலா வரும் புலி, கடந்த இரண்டு வாரங்களில், 10 மாடுகளை தாக்கி கொன்றுள்ளது.
புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில், வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 'புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதையும், மக்கள் அங்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என, வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'மாடுகளை தாக்கி கொன்ற, புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். புலிகள் நடமாட்டம் உள்ள எஸ்டேட் பகுதியில் முட்புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, நேற்று காலை முதல் தேயிலை தோட்டத்தில், வளர்ந்துள்ள முட்புதரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.