/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதியை ஒட்டி உலா வரும் புலி; தானியங்கி கேமரா வைத்து கண்காணிப்பு

ADDED : ஆக 21, 2025 08:03 PM

கூடலுார்; மசினகுடி அருகே, கல்குவாரியை ஒட்டி உலா வரும் வயதான புலியை, வனத்துறையினர், 8 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட,கல்குவாரியை ஒட்டி முட்புதர் பகுதியில் வயது முதிர்ந்த புலி ஒன்று, மெதுவாக நடந்து செல்வதை அப் பகுதியினர் பார்த்துள்ளனர்.
வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் நேற்று முன்தினம், ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, புலியை கண்காணிக்க மேலும், 6 தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். 'இப்பகுதிக்கு, பொதுமக்கள் செல்ல கூடாது,' என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகை யில், 'புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதியில், தானியங்கி கேமராக்கள் வைத்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதிகள் பொதுமக்கள் யாரும் செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.