தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூண்டில் சிக்கிய புலி முதுமலையில் விடுவிப்பு

 கூண்டில் சிக்கிய புலி முதுமலையில் விடுவிப்பு

 கூண்டில் சிக்கிய புலி முதுமலையில் விடுவிப்பு


ADDED : நவ 30, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, 30 மாடுகளை கொன்ற புலி வனத்துறையினரின் மூன்று மாத முயற்சிக்கு பின் கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை சர்கார் மூலா, கொட்டாய் மட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உலா வந்த புலி, 30க்கும் மேற்பட்ட பசுமாடுகளை தாக்கி கொன்றது.

வனத்துறையினர் ஆக., 8 முதல், ஐந்து இடங்களில் கூண்டு வைத்து, 55 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, நவீன ட்ரோன் கேமரா மற்றும் முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். புலி கூண்டில் சிக்கவில்லை.

இதனிடையே, புலியை பிடிக்க கேரள வனத்துறையிடம் பெறப்பட்ட பெரிய அளவிலான கூண்டை வைத்தனர்.

இந்நிலையில், கொட்டாய்மட்டம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு புலி சிக்கியது.

நேற்று காலை, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து, புலிக்கு மயக்க ஊசி செலுத்தாமல், சிறிய கூண்டுக்கு மாற்றினர்.

டி.எப்.ஒ., வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூண்டில் சிக்கிய 3 வயது ஆண் புலியை, முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில், வேறு ஆண் புலி நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவிக்கப்பட்டது.

''ஆரோக்கியமாக உள்ள அந்த புலி, அப்பகுதியை வாழ்விடமாக மாற்றிக் கொள்ளும். மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வராது. புலியை பிடிக்கும் பணியில் வன ஊழியர்களின் பங்கு, அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us