/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்
/
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2024 10:53 PM

கூடலுார் : திருப்பதி லட்டு பிரசாரத்தில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கூடலுாரில் வி.எச்.பி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பதி கோவிலில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சியில், லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில், கொழுப்பு கலக்கப்பட்டதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி லட்டு பிரசாரத்தில் மாமிச கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதை கண்டித்து, கூடலுாரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வி.எச்.பி., மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், 'திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் மாமிச கொழுப்பு கலந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைத் தலைவர் சசிகுமார், நகர செயலாளர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.