/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 29, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:
நீலகிரியில் ஒன்பது தேர்வு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2-ஏ தேர்வினை, 1,753 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 , 2- ஏ எழுத்து தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடந்தது. நீலகிரியில் இத்தேர்வு எழுத, 2,604 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
தேர்வுக்காக, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 9 தேர்வு மையங்களில்,1,753 பேர் தேர்வு எழுதினர். 851 பேர் தேர்வு எழுத வரவில்லை. முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.