/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை விலை பிரச்னையை தீர்க்க... உத்தரவாதம் வேண்டும்! மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் அறிவிப்ப
/
பசுந்தேயிலை விலை பிரச்னையை தீர்க்க... உத்தரவாதம் வேண்டும்! மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் அறிவிப்ப
பசுந்தேயிலை விலை பிரச்னையை தீர்க்க... உத்தரவாதம் வேண்டும்! மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் அறிவிப்ப
பசுந்தேயிலை விலை பிரச்னையை தீர்க்க... உத்தரவாதம் வேண்டும்! மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் அறிவிப்ப
ADDED : மார் 29, 2024 10:11 PM

கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பசுந்தேயிலை விலை பிரச்னைக்கு தீர்வு காணும்
வகையில், பத்திரத்தில் உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க
போவதாக, மலை மாவட்ட விவசாய சங்கத்தின் முடிவெடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள், தேயிலை பயிரிட்டுள்ளனர். இத்தொழிலை, மூன்று லட்சம் தொழிலாளர்கள் நம்பி உள்ளனர்.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக, பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அதிகப்பட்சமாக, 18 ரூபாய் விலை கிடைக்கிறது.
இடுப்பொருட்களின் விலை உயர்வு
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுப்பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையுடன், கூலி உயர்வு அதிகரித்துள்ளது.
இதனால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. அதனால், தோட்டப்பராமரிப்பு மற்றும் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கை
இதற்கு தீர்வு காண, மத்திய வர்த்தகத்துறை, 1977ல் பிறப்பித்த, குறைந்தபட்ச ஏல தொகையாக, ஒரு கிலோ தேயிலை துாள், 200 ரூபாய்க்கு ஏலம் எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்துாள் அனைத்தும், நேரடியாக ஏல மையத்திற்கு கொண்டுவர வேண்டும். தனியார் தேயிலை தொழிற்சாலைகள், தங்களது தேயிலை துாளை சில்லறை வர்த்தகத்தில் விற்க கூடாது என்பதாகும்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர், 'தாங்கள் வெற்றி பெற்றால், பசுந்தேயிலை விலை பிரச்னைக்கு தீர்வு காண்போம்' என, அரைத்த மாவையே அரைப்பது போல் வாக்குறுதியை அள்ளி வீசுகின்றனர். வென்ற பின் வாய் திறப்பதில்லை.
பத்திரத்தில் எழுதி உறுதி அளிக்கவேண்டும்
மலை மாவட்ட சிறு விவசாய சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''மாவட்ட முழுவதும், ஆறு தாலுகாகளிலும், மலை மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் துண்டு பிரசுரம் வினியோகித்து, 'ஓட்டு புறக்கணிப்பு' பிரசாரம் செய்து வருகிறோம்.
இது விவசாயிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர், பசுந்தேயிலை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து கிராம தலைவர் மத்தியில், பத்திரத்தில் எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அத்தகைய கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு தரப்படும்,'' என்றார்.

