/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோடர் எருமைகள் பாதுகாப்பு திட்டம் துவக்கம்; ஆராய்ச்சி நிலைய பேராசிரியை தகவல்
/
தோடர் எருமைகள் பாதுகாப்பு திட்டம் துவக்கம்; ஆராய்ச்சி நிலைய பேராசிரியை தகவல்
தோடர் எருமைகள் பாதுகாப்பு திட்டம் துவக்கம்; ஆராய்ச்சி நிலைய பேராசிரியை தகவல்
தோடர் எருமைகள் பாதுகாப்பு திட்டம் துவக்கம்; ஆராய்ச்சி நிலைய பேராசிரியை தகவல்
ADDED : பிப் 07, 2024 10:47 PM

ஊட்டி : நீலகிரியில் குறைந்து வரும் தோடர் எருமைகளை பாதுகாக்க, 'தோடர் இன எருமைகள் பாதுகாப்பு திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், அதிக வனப்பகுதிகளை கொண்டது. இந்த வனப்பகுதிகளை ஒட்டி, 6 இன பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில், 'மந்து' என அழைக்கப்படும் கிராமங்களில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் எருமை மாடுகளை வளர்கின்றனர்.
அவர்களது வாழ்வில் எருமையை சார்ந்து தான் பண்டிகை விசேஷ நிகழ்ச்சிகள், கோவிலில் பூஜைகள் நடக்கிறது. இதனால், அதனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். எருமைகளுக்கான உப்பிடும் பண்டிகையும், ஆண்டு தோறும் ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த காலங்களில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது, 10 எண்ணிக்கையிலான தோடர் எருமைகள் வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும், 1,200 தோடர் எருமைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
'குறைந்து வரும் தோடர் எருமைகளை பாதுகாக்க வேண்டும்,' என, சமீபத்தில் சாண்டிநல்லா ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை பிரேமா கூறுகையில், ''நீலகிரி தோடர் எருமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாவட்ட முழுவதும், 1,200 தோடா எருமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது, இதன் எண்ணிக்கையை அதிகரிக்க 'தோடர் இன எருமைகள் பாதுகாப்பு திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.
தோடர் மக்களிடமிருந்து, 35 தோடர் இன எருமைகளின் கிடா கன்று குட்டிகள் வாங்கப்பட்டு சாண்டிநல்லா ஆராய்ச்சி நிலையத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இனபெருக்க வயதை அடைந்தவுடன் தேவைப்படுபவர்களுக்கு பாதி விலையில் வழங்கப்படுகிறது. தவிர, இந்த பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தோடர் எருமைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் பனி காலத்தில் தேவைக்கேற்ப புல் தீவனம் வழங்கப்படும்,'' என்றார்.

