ADDED : ஏப் 23, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் மாலை, 6:00 மணிக்கு மேல் ஓட்டு சாவடி நிலையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட வாய்ப்பு தரப்பட்டது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதி ஓட்டுச் சாவடி மையங்களில் நேற்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி சென்றனர். போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடனும், தேர்தல் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் பங்களிப்புடனும் தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், மாலை, 6:00 மணிக்கு மேலும் வரிசையில் காத்திருந்த பந்தலுார் அருகே பொன்னுார் ஓட்டு சாவடி மையத்தில், 42 பேர் தேவாலா பகுதியில், 87 பேர் டோக்கன் கொடுக்கப்பட்டு, ஓட்டு போட வாய்ப்பு தரப்பட்டது.
