/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி
/
பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி
ADDED : ஜன 08, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (10 ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (10ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழாவில், மாலை 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அடுத்து திருமஞ்சன அபிஷேகமும், சகஸ்ர நாம அர்ச்சனையும், நடக்கிறது.
திருமாலுக்கு 108 வடை சாற்றப்பட்டு, தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.