தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு நிலை பாதிப்பு

சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு நிலை பாதிப்பு

சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு நிலை பாதிப்பு


UPDATED : நவ 27, 2026 07:00 PM

ADDED : நவ 27, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:00 PM ADDED : நவ 27, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: தமிழகத்தில், பரம்பிக்குளம்- – ஆழியாறு பாசன திட்டத்தில், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, என, மா.கம்யூ., கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, பரம்பிக்குளம் – -ஆழியாறு திட்டத்தில் இருந்து, மணக்கடவு தடுப்பணை வழியாக, சித்தூர் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வந்த நீர்ப்பங்கீட்டு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டு, விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும், திட்டமிட்டபடி நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் இப்பகுதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயங்காததால், இயல்பு நிலை பாதித்தது.

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் நீண்ட தூரப் பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், உள்ளூர் பஸ் சேவைகள் முடங்கின. பல்வேறு இடங்களில், மா.கம்யூ. கட்சி தொண்டர்கள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமேஷ் அச்சுதன், முதல்வர் சதீசன் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தலைமை செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், முதல்வரின் நேரடித் தலையீட்டின் விளைவாகவே, முன்கூட்டியே தண்ணீர் கிடைத்ததாகவும் மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us