/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
/
யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : நவ 25, 2024 10:28 PM

கூடலுார்; முதுமலையில், மழையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து, யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், ஜூன் மாதம் துவங்கிய பருவமழை இம்மாதம் வரை தொடர்ந்தது. மேலும், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு குளிர்ச்சியான காலநிலையும் நிலவி வந்தது. இதனால், முதுமலைக்கு காலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது பருவமழை நிறைவடைந்ததை தொடர்ந்து, முதுமலையில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால், முதுமலையில் வாகன சவாரி செய்யவும், தெப்பக்காடு யானைகள் முகாமில் காலை, மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையில் நிலவும் காலநிலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்கள் உட்பட பிற நாட்களிலும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, இவ்வழியாக சபரிமலைக்கு வந்து செல்லும், வெளி மாநில ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது,' என்றனர்.