/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு பகுதியில் சுற்றுலா பயணி உயிரிழப்பு; அனுமதி இல்லாமல் விடுதி நடத்திய இருவர் கைது

ADDED : மே 18, 2025 10:01 PM

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி சூரல்மலைப்பகுதியில் கடந்த ஆண்டு நிலச்சரிவின் போது ஏற்பட்ட, பாதிப்பை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.
தற்போது கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சூரல்மலை செல்லும் சாலையில் உள்ள, தொள்ளாயிரம்கண்டி என்ற இடத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி பாலம், ஜிப்லைன் ஆகியவற்றுடன் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
அதில், ஒரு விடுதியில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளை சேர்ந்த, 16 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் குழுவினர் தங்கியுள்ளனர். அதில், புற்களால் அமைக்கப்பட்ட ஒரு குடிலில் மலப்புரம் பகுதியை சேர்ந்த நிஷ்மா,24, என்பவர் தங்கி இருந்துள்ளார்.
இரவு உறங்கி கொண்டிருந்தபோது மேல் கூரை உடைந்து விழுந்ததில், நிஷ்மா காயமடைந்தார். இவரை மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், விடுதி உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தொடர்பாக, மேலாளர் சுசீந்திரத், மேற்பார்வையாளர் அனுராக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.