/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைக்கு தொந்தரவு கொடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
/
யானைக்கு தொந்தரவு கொடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
யானைக்கு தொந்தரவு கொடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
யானைக்கு தொந்தரவு கொடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
ADDED : ஆக 12, 2025 07:40 PM
கூடலுார்; கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையை செல்பி எடுத்த போது, அதனிடம் சிக்கி உயிர் தப்பிய நபருக்கு கர்நாடக வனத்துறையினர், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை அருகே, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, பார்த்து கொண்டிருந்தனர். சிலர் செல்பி எடுத்து இடையூறு ஏற்படுத்தினர்.
இதனால், ஆக்ரோசமடைந்த, காட்டு யானை செல்பி எடுத்த சுற்றுலா பயணியை துரத்தி தாக்கியது. அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
பந்திப்பூர் வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு பசரலுார் பகுதியை சேர்ந்த பசுவாராஜ், 50, என்பது தெரியவந்தது. வனத்துறையினர் அவரை பிடித்து, விசாரணை மேற்கொண்டு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் அருகே, வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.