/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் 'வெறிச்'
/
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் 'வெறிச்'
ADDED : ஜூலை 24, 2025 10:15 PM

ஊட்டி: ஊட்டியில் மழையுடன் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது.
ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை, 15, குறைந்தபட்சம், 12 டிகிரி செல்சியசாக உள்ளது. சுற்றுலா பயணியரின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட பிற சுற்றுலா தலங்கள் சுற்று லா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஊட்டியில் பல காற்று டன் மழை பெய்ததால், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறைக்கு சொந்தமான, 'பைன் பாரஸ்ட், எட்டாவது மைல், டிரீ பார்க்' ஆகிய சூழல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பட்டனர்.