/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு
/
சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு
ADDED : டிச 09, 2024 09:41 PM
ஊட்டி; நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
நீலகிரி மாவட்டத்தில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர்.
நீலகிரியை பொறுத்த வரை தொழில் வாய்ப்புகள் இல்லை. 'ஆன்லைன்' மூலம் இயங்கும் 'கார்ப்பரேட்' வாகனங்கள் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல முறை புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்கள் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.