/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர வீட்டின் மீது சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து
/
சாலையோர வீட்டின் மீது சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து
சாலையோர வீட்டின் மீது சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து
சாலையோர வீட்டின் மீது சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூலை 06, 2025 10:47 PM

ஊட்டி; ஊட்டி- கூடலுார் சாலையில், அதிவேகமாக வந்த கார் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்,
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் பட்பயர் வழியாக வருகின்றன. இச்சாலையில் வேகத்தடை மற்றும் 'வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும்,' போன்ற விழிப்புணர்வு பதாகைகள் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே, நேற்று காலை ஊட்டியை நோக்கி அதிவேகமாகச் வந்த கேரள பதிவெண் கொண்ட கார் பள்ளத்தில் கவிழ்ந்து வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாழ்வான பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐந்து பேர் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குள்ளானவர்களை அப்பகுதி மக்கள் காரில் இருந்து வெளியேற்றினர். இப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதால், தேசிய நெடுஞ்சாலை துறையினர், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.