/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரேக் பிடிக்காத சுற்றுலா வாகனம்; கூடலுாரில் பெரும் விபத்து தவிர்ப்பு

ADDED : செப் 09, 2025 10:22 PM

கூடலுார்; கூடலுாரில் சுற்றுலா வாகனம் பிரேக் பிடிக்காமல் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா வாகனம் திடீரென பிரேக் பிடிக்காமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதியில் நுழைந்தது.
போலீசார் அங்கு இருந்தவர்கள் சப்தமிட்டு அனைவரையும் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.
தொடர்ந்து சென்ற வாகனத்தை போலீசார், மக்கள் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, வாகனம் சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.