/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வரிசையாக நின்று தண்ணீர் குடித்த மான்கள்: முதுமலையில் சுற்றுலா பயணிகள் வியப்பு

ADDED : ஜன 04, 2024 10:46 PM

கூடலுார்:முதுமலை, மசினகுடி பகுதியில், ஆற்றின் கரையில் வரிசையாக நின்று மான்கள் தண்ணீர் குடித்த காட்சி சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைத்தது.
முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால், தண்ணீர் குட்டைகள், நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் குடிநீர் தேடி ஆறுகளை நோக்கி வர துவங்கியுள்ள. அவ்வப்போது வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், மசினகுடி வழியாக செல்லும் ஆற்றில், புள்ளிமான் கூட்டம், ஒரே வரிசையில் தண்ணீரை குடித்து சென்ற காட்சியை, அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். பலரும் 'போட்டோ' எடுத்தனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஆறுகளில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பது வழக்கமாக நிகழ்வாகும். ஆனால், மான்கள் ஒற்றுமையாக ஆற்றின் கரையில் ஒரே மாதிரியாக தண்ணீர் குடித்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. இது போன்ற காட்சியை எப்போதாவது தான் பார்க்க முடியும்' என்றனர்.