/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமை மலைகள் வியப்பில் சுற்றுலா பயணிகள்
/
பசுமை மலைகள் வியப்பில் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூலை 15, 2025 08:13 PM
கூடலுார்; கூடலுாரில், பசுமையாக காட்சி தரும் நாடுகாணி, குண்டம்புலா, ஓவேலி மலை தொடர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.
கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தை ஒட்டி, குண்டம்புழா, ஓவேலி, தோட்டக்கலை பண்ணை, கரியன் சோலை ஊசிமலை, கோல்ட்மைன்ஸ் மலைத்தொடர்கள் உள்ளது.
தாவர மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள காட்சி முனையில் இருந்து மலைகளை ரசித்து செல்கின்றனர். கோடையில் பசுமை இழந்து காணப்பட்ட மலை தொடர்கள், தற்போது பெய்து வரும் பருவ மழையை தொடர்ந்து, பசுமைக்கு மாறி உள்ளது. இதன் அழகை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இயற்கை மலை சார்ந்த இப்பகுதி, பருவ மழைக்கு பின் பசுமையாக காட்சியளிக்கிறது. இங்கு, நிலவும் மிதமான காலநிலை, பசுமை மலைகளுக்கு இடையே தவழ்ந்து செல்லும் மேகமூட்டம், மிதமான காற்றின் வேகம், பருவமழையும் மனதுக்கு, உடலுக்கு இதமாக உள்ளது,' என்றனர்.