/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏரியில் புது பொலிவான படகுகள் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
ஏரியில் புது பொலிவான படகுகள் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஏரியில் புது பொலிவான படகுகள் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஏரியில் புது பொலிவான படகுகள் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஏப் 18, 2025 11:56 PM
ஊட்டி: ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய ஏதுவாக, படகுகள் புதுப்பொலிவுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வார இறுதி நாட்களில், இ---பாஸ் நடைமுறை இருந்தும், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. அடுத்த மாதம் துவங்க உள்ள கோடை விழா நாட்களில் பார்வையாளர்களின் கூட்டம், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, தொட்ட பெட்டா சிகரத்தை அடுத்து, இயற்கை எழில் சூழ்ந்த, படகு ஏரியில், குடும்பத்துடன் சவாரி செய்வதை விரும்புகின்றனர். இங்கு, மோட்டார் படகு, துடுப்பு படகு மற்றும் மிதி படகு என, 100க்கு மேற்பட்ட படகுகள் சவாரிக்கு விடப்படுகின்றன.
சில படகுகள் வர்ணம் பூசாமல் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், கோடை விழா நாட்களில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், அனைத்து படகுகளுக்கும் வர்ணம் பூசி, புது பொலிவுடன் காணப்படுகின்றன. இதில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

