/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புத்தாண்டு; முதுமலையில் சுற்றுலா பயணிகள்
/
புத்தாண்டு; முதுமலையில் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 01, 2024 10:47 PM

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு பிராணிகளுக்கு உணவு கொடுப்பதை பார்க்க காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.
இதன் காரணமாக, தெப்பக்காடு பகுதியிலும், மைசூரு தேசிய நெடுஞ்சாலை கார்குடி, கல்லல்லா மற்றும் தெப்பக்காடு - மசினகுடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஓட்டுனர்கள் கூறுகையில்,'கோடை சீசன் விடுமுறையில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, முதுமலை சாலைகளில் புதிய பாலம் கட்டும் பணிகளை கோடைக்கு முன்பாக முடிக்க வேண்டும்,' என்றனர்.

