/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை கட்டுப்பாடு அத்துமீறினால் கைது செய்யவும் நடவடிக்கை

ADDED : டிச 19, 2025 05:26 AM
ஊட்டி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, நீலகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
நீலகிரியில், தொடர் விடுமுறையான கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி வரும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று வீடியோ எடுக்கவும் அல்லது ட்ரோன் விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வன பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 'இட்டன் ஸ்பாட்ஸ்' என்று கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது. பாதுகாப்பு இல்லாததால் அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் அது போன்ற இடங்களுக்கு அத்துமீறி சென்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால், அவர்கள் மீது வன சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவர்,'' என்றார்.