/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் வண்ண மீன் குளம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு
/
பூங்காவில் வண்ண மீன் குளம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு
பூங்காவில் வண்ண மீன் குளம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு
பூங்காவில் வண்ண மீன் குளம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு
ADDED : ஜூலை 14, 2025 08:53 PM

ஊட்டி; ஊட்டி கர்நாடகா கார்டன் வளாகத்தில் வண்ண மீன் குளத்தை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், 'கேலா லில்லி, ஜெர்மனியம், ரெட்ஹாட், போகர், பிகோனியா,' போன்ற மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது. தவிர, பிற வண்ண மலர்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியரை மகிழ்விக்க தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பூங்கா வளாகத்தில் மீன் குளம் அமைக்கப்பட்டு வண்ண மீன்கள் குளத்தில் விடப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் வண்ண மீன்கள் நீந்தி செல்லும் அழகிய காட்சியை ரசித்தவாறு அதன் அருகே நின்று 'போட்டோ, செல்பி' எடுத்து செல்கின்றனர்.