/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பரம்பிக்குளத்தில் 'மலசர் நடனம்' சுற்றுலா பயணியர் கண்டுகளிப்பு
/
பரம்பிக்குளத்தில் 'மலசர் நடனம்' சுற்றுலா பயணியர் கண்டுகளிப்பு
பரம்பிக்குளத்தில் 'மலசர் நடனம்' சுற்றுலா பயணியர் கண்டுகளிப்பு
பரம்பிக்குளத்தில் 'மலசர் நடனம்' சுற்றுலா பயணியர் கண்டுகளிப்பு
ADDED : பிப் 05, 2025 11:57 PM

பாலக்காடு: பரம்பிக்குளத்தில், சுற்றுலா பயணியருக்கு பழங்குடியினரின் நடனம் மாறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தமிழக எல்லையில் உள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்.
மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பரம்பிக்குளத்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, பழங்குடியினத் துறையை சேர்ந்த மலசர் இனத்தவரின் நடனம் மாறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது.
வனத்துறையின் சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக, பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. அங்குள்ள நான்கு குடியிருப்பு பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டியக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஓமனா கூறியதாவது:
பாரம்பரிய கலை வடிவமான 'மலசர் நடனம்' முறையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வனத்துறையின் இந்த திட்டம், எங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. இந்த நடன நிகழ்ச்சி வாயிலாக, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 175 ரூபாய் கிடைக்கிறது. இது எங்களுக்கு பெரிய ஆறுதலாகும்.
குழுவினர் நடனமாட பின்னணியில் 'உறுமா' என்ற பழங்குடியின வாத்திய கருவி, தவில் வாசிக்கப்படுகிறது. 'மலசர்' நடனம், இசையை சுற்றுலா பயணியர் ரசிக்கின்றனர்.
இதனால், நடனம், இசை பாதுகாக்கப்படுவதுடன், அடுத்த தலைமுறையினரும் கற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.