/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்; மூன்று நாட்களில் 84 ஆயிரம் பேர் வருகை

ADDED : மே 18, 2025 09:58 PM

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மூன்று நாட்களில், 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை மாநில முதல்வர் ஸ்டாலின், 15ம் தேதி துவக்கி வைத்தார். இம்மாதம் 25ம் தேதி வரை நடக்கிறது.
சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில், 'கண்ணாடி மாளிகை, கள்ளிச் செடி, பெரணி இல்லம், 7.50 லட்சம் கார்னேஷன், ரோஜா, சாமந்தி மலர்களில் சோழ பேரரசின் பிரமாண்ட அரண்மனை நுழைவு வாயில், அன்னபட்சி, கல்லணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, பூங்காவில் ஆங்காங்கே பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசை கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு உள்ளிட்ட மலர் அலங்கார வடிவமைப்புகள் காணப்படுகின்றன. 30 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர்கள் மாடங்களில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சி துவங்கிய இரு நாட்களில் கன மழை பெய்ததால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
நேற்று காலை முதல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதமான காலநிலையால் அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் ஆடி, பாடி மகிழ்ந்தனர். கடந்த மூன்று நாட்களில் பூங்காவை, 84 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.