/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணியர்; மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
/
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணியர்; மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணியர்; மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணியர்; மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 26, 2025 02:15 AM

ஊட்டி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து, ஊட்டியில் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருவதால், மலைப்பாதை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர். நகரில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தொட்டபெட்டா, ஸ்பென்ஷர் சாலை, படகு இல்ல, பிங்கர் போஸ்ட் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நேற்று முதல், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்கள் குன்னுார் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் ஜனவரி 5ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதேபோல், சுற்றுலா வாகனங்கள் ஊட்டியில் அறிவிக்கப்பட்ட 'பார்க்கிங்' தளங்களில் நிறுத்தப்பட்டு, சுற்று பேருந்தில் பயணிகளை அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

