மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதம்: சோர்வடைத்த சுற்றுலா பயணிகள்
மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதம்: சோர்வடைத்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 22, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுார் புறப்பட்ட மலை ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
குன்னுார்---- மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி குன்னுார் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட தயாரான நிலையில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், காலை, 10:15 மணிக்குள் வர வேண்டிய மலை ரயில் காலை, 11:20 மணிக்கு குன்னூர் வந்தடைந்தது. கடும் வெயில் நிலவும் நிலையில் சுற்றுலா பயணிகள் சோர்வடைந்தனர்.
