/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் சாலைகளில் வாகன நெரிசல்
/
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் சாலைகளில் வாகன நெரிசல்
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் சாலைகளில் வாகன நெரிசல்
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் சாலைகளில் வாகன நெரிசல்
ADDED : டிச 23, 2024 05:45 AM

ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டிக்கு வார விடுமுறை இறுதி நாட்களில், 5,000 முதல், 10,000 வரை சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.
ஊட்டியில் பெய்து வந்த மழை, கடந்த நான்கு நாட்களாக ஓய்ந்த நிலையில், இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், கேரளா, கர்நாடக உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
நேற்று தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பார்வையாளர்களின் கூட்டம், அதிகரித்து காணப்பட்டது. இதமான காலநிலையில், இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர்.
இதனால், மதுவானா பூங்கா சந்திப்பு, மத்திய பஸ்நிலையம் உட்பட, முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், உடனுக்குடன் நெரிசலை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.